×

நாட்டை வழிநடத்த சிறந்த நபர் கிடைத்ததால் விலகுகிறேன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா பதவி விலகுவதாக அறிவிப்பு

வெல்லிங்டன்: நியூசிலாந்து பிரதமராக ஐந்தரையாண்டுகள் பதவியில் இருந்த ஜெசிந்தா ஆர்டெர்ன் வரும் பிப்ரவரி 17-ம் தேதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து பிரதமராக பதிவி வகித்து வருபவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜெசிந்தா ஆர்டெர்ன் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் அங்கு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியை விட ஜெசிந்தாவின் கட்சி பின்தங்கியது. தேர்தலில் ஜெசிந்தா ஆர்டெர்னின் கட்சி பின்னடைவை சந்தித்துள்ள சூழலில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 7-ம் தேதியுடன் தனது பதவியில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்திருக்கிறார்.

தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில் இது கடினமான பணி என்பதால் நான் விலகி செல்லவில்லை. அப்படி இருந்திருந்தால் வெறும் 2 மாதங்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகி சென்று இருப்பேன். நாட்டை வழிநடத்துவதற்கு சிறந்த நபர் இருப்பதை அறிந்ததால் நான் இந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்தார். இதனிடையே அடுத்து வரும் தேர்தலில் நியூசிலாந்து தொழிலாளர் கட்சி வெற்றி பெரும் என்றும், அடுத்த தொழில்கட்சி தலைவரை தேர்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு வருகிற ஜனவரி 22 அன்று நடைபெறும் எனவும், தனது பதவி காலம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி முடிவடையும் என்று ஜெசிந்தா கூறினார். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்றை வெற்றிகரமாக ஜெசிந்தா கையாண்டவிதம் உலகம் முழுவது பாராட்டைப் பெற்றது.   



Tags : New Zealand ,PM ,Jacinda , New Zealand Prime Minister resigns to lead country
× RELATED நான் யாரிடமாவது ஆதாயம்...